6,798 Views
கணக்கு காட்டப்படாத சொத்துக்கள் தொடர்பில் நடிகர் விஜய், தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வகுமார், இயக்குனர் சிம்புதேவன், அன்பு செழியன், விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திர சேகர், கலைப்புலி தாணு மற்றும் புலி படத்துடன் நேரடி தொடர்புடையவர்களின் வீடுகள் அலுவலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேந்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினார்கள்.
தேடுதல் வேட்டை நடிகைகள் நயன்தாரா, சமந்தா வீடுகளிலும் இன்று வரைக்கும் தொடர்துள்ளது. பல்வேறு புகார்களின் அடிப்படையில் தமிழகத்தில் பல இடங்களிலும் அமைந்துள்ள குறித்த பிரபலங்களின் வீடுகளில் சுமார் 500 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினால் மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திடுக்கிடும் பல தகவல்களை அதிகாரிகள் வெளியிட்டனர். சோதனையின் போது ஒருவரின் வீடுகளில் இருந்து வரவு காட்டப்படாத 2 கோடி ரொக்க பணம் சிக்கியது. 2 கோடி தங்கம், வைர நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மிக முக்கியமாக குறித்த ஒரு பிரபலத்தின் வீட்டில் பெருமளவான நிதி மற்றும் பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும் 10 பேருடைய வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பத்திரங்கள், வங்கி கணக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்த போது கணக்கில் காட்டாமல் 100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வைத்து இருப்பதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து முக்கிய பிரபலங்கள் பிரச்சனைகளை வெளியே தெரிய விடாமல் மூடி மறைக்க அரசியல்பெரியவர்களையும் பார்க்க சென்றதாக தகவல்கள் கூறுகின்றன.இதேநேரம் சிலரது திட்டமிட்ட சதியாக இருக்கலாம் எனவும் திரை வட்டாரத்தில் பேசப்படுகிறதாம்.
-ரிஷிவ்-