5,330 Views
பிறந்து 17 நாட்கள் மட்டுமேயான பச்சிளம் குழந்தையொன்றை தாயொருவர் பொது இடமொன்றில் விட்டுச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கண்டி, பேராதெனிய தங்கொல்லை பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழந்தையை பெண்ணொருவர் கண்டெடுத்து பேராதெனிய வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளார்.
குழந்தையின் அருகில் கடிதமொன்றும் இருந்துள்ளது. அதில் குழந்தையை பராமரிக்க முடியாமையால் விட்டுச்செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.