ஏற்கனவே தனுஷ் +அமலா பால் நடிப்பில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றுக் கொடுத்த திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. பெருவாரியான வருமானத்தோடு படக் குழுவுக்கும் நல்ல பெயரையும் விருதுகளையும் படம் வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியளித்தது.
இந்நிலையில், மீண்டும் அதன் தொடர்ச்சியாக வி.ஐ.பி 2 தயாரிக்கப்பட்டு தனுஷ் நடிக்க, அவருக்கு தந்தையாக கே.எஸ்.ரவிக்குமாரும், அன்னையாக ராதிகா சரத்குமாரும் நடித்து வந்தார்கள்.
ஆனாலும், இப்பொழுது தனுஷ் இந்த செய்தியை மறுத்துள்ளார். அதாவது, வி.ஐ.பி 2 எனும் திரைப்படமாக இந்தத் திரைப்படம் வெளிவராது. இன்னும் பெயர் சூட்டப்படவில்லையே தவிர, இந்தப் படம் வேலையில்லா பட்டதாரியின் பாகம் இரண்டாய் வெளிவராது. வேறு ஒரு கதையம்சமும் திரை அமைப்பும் கொண்ட புதிய வடிவிலான திரைப்படமே இந்தப் படம் என, விளக்கம் கொடுத்திருக்கிறார் நம்ம தனுஷ்.
-கோடம்பாக்கக் குருவி-