Darling GVPrakash - "அம்மா பேய்" ஜிவி யின் டார்லிங்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
3,187 Views
யார்தான் ஆரம்பித்து வைத்தது இந்த பேய் பட சீசனை தமிழ் சினிமாவில்? இப்போது 12க்கும் மேற்பட்ட பேய் படங்கள் ஒரே நேரத்தில் உருவாகி வருகின்றன. ரொம்பத்தான் தமிழ் சினிமாவை பேய் படங்கள் போட்டு ஆட்டுவிக்கின்றன.
சுந்தர் சியின் அரண்மனையைத் தொடர்ந்து நம்மளை கதிகலங்க வருகிறது டார்லிங். இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக நிக்கிதா கல்ரனி நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையில் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறார் நா. முத்துக்குமார்.
கடந்த ஆண்டு தெலுங்கில் வெளிவந்த பிரேம கதா சித்ரம் என்ற படத்தின் ரீமேக்தான் இந்த டார்லிங். தெலுங்கில் ஹிட்டடித்து வசூலை வாரிக் குவித்த படம் தமிழிலும் வசூலை அள்ளும் என்று நம்பலாமா??