Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
21
விஜயின் அடுத்த படம் தொடர்ந்தும் சிக்கலில்

#vijay #kaakki # - விஜயின் அடுத்த படம் தொடர்ந்தும் சிக்கலில்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

11,724 Views
இளைய தளபதியின் அடுத்த படத்துக்கு எல்லாப் பக்கத்திலும் அடி விழ ஆரம்பித்து விட்டது.என்ன பெயர் வைப்பது என்பதில் இழுபறி அதேபோல் இந்த கதையை ஒத்த திரைப்படம் ஒன்று முன்னதாகவே வெளியாகி வெற்றி பெற்றுள்ளது என்றும் குற்றச்சாட்டுக்கள் தொடர்கிறது. 

ஏற்கனவே வெளியாகி அமோக வெற்றி பெற்ற திரைப்படத்தின் கதைகளையே கொஞ்சமாக கதையை மாற்றி தன்னுடைய படமாக திரைக்கதையை அமைத்து வருகிறார் இயக்குனர் அட்லி என அவர் பற்றிய பொதுவான கருத்துகளும் கலைத்துறையினர் மத்தியில் பேசப்படுகிறது.

ராஜா ராணி திரைப்படத்தின் கதையும் மௌன ராகம் படத்தின் சாயலை அனேக இடங்களில் ஒத்துப்போனமையும் குறிப்பிடத்தக்கது.ஆனாலும் ராஜா ராணி என்ற பெயர் கூட சத்யராஜ் நடிக்க இருந்த ஒரு படத்துக்கு சூட்டப்பட்ட பெயர் என்பதும் குறிப்பிடத்தக்கது.தற்போது விஜய்யை வைத்து அட்லீ இயக்கும் படத்தின் கதையும்கூட புதுக்கதை இல்லையாம்.அது கூட சத்ரியன் படத்தின் கதையம்சத்தை ஒத்துப்போவதாக உள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.சத்ரியனில் கதாநாயகன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள அதே பாத்திரத்தில் விஜயும் நடிப்பதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது காக்கி என்று பெயர் வைத்துள்ள இப்படத்துக்கு முன்னதாக மூன்று முகம் என பெயரிட தீர்மானித்தாலும் அது ஏற்க்கனவே ரஜனிகாந்த் ன் திரைப்படம் ஒன்றின் பெயர் என்பதால் சத்ய மூவிஸ் அந்த பெயரை வழங்க மறுத்துள்ளது. இதனால் அந்த பெயரும் கைவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய் நடிக்கும் படத்துக்கு காக்கி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் அடிபடுகிறது.காக்கி என்ற தலைப்பும் ஏற்கனவே ஒரு படத்துக்கு வைக்கப்பட்ட தலைப்புதான்.இதில் சரத்குமார் நடிகராக நடிக்க ஆரம்பித்து இடை நடுவே கைவிடப்பட்ட படம் என்பதால் காக்கி என்ற தலைப்பை விஜய் படத்துக்கு சூட்ட திட்டமிட்டுள்ளனர்.

சரத் குமார் நடிக்க இருந்த காக்கி படத்தின் தயாரிப்பாளர்களான ஞானவேலு, ஜெயப்பிரகாஷ் இருவரும் பிரிந்து தற்போது ஒருவருடன் ஒருவர் நல்ல உறவிலுளும் இல்லை.இந்த நிலையில் தலைப்பை விட்டுக்கொடுக்க ஒருவர் சம்மதித்தாலும் இன்னொருவர் சம்மதிப்பாரா என்பது மிகப்பெரிய சந்தேகமே.

ஒருவேளை காக்கி படத்தின் தயாரிப்பாளர்கள் இருவரும் சம்மதித்தாலும் அப்படத்தின் இயக்குநரான வின்சென்ட் செல்வா தன்னுடைய தலைப்பை விட்டுக்கொடுக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

வின்சென்ட் செல்வா இதற்க்கு முன்னர் விஜய்யை வைத்து அவரது ஆரம்ப காலங்களில் ப்ரியமுடன், யூத் என இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்தவர்.ஆனாலும் அதன் பிறகு வின்சென்ட்செல்வா இயக்கத்தில் நடிக்க விஜய் ஆர்வம் காட்டவில்லை.அதன் பிறகு வின்சென்ட் செல்வா தன்னுடைய முன்னேற்றத்தில் சரிவைக்கண்டார்.

விஜய்யின் இன்றைய அந்தஸ்துக்கு வின்சென்ட் செல்வாவுக்கு ஒரு படம் கொடுத்திருந்தால் அவரது வாழ்க்கை பிரகாசமாகி இருக்கும்.விஜய் அதை செய்யவில்லை.இப்படியொரு சூழலில் யாரோ இயக்கும் படத்தில் நடிக்கும் விஜய்க்காக தன்னுடைய காக்கி என்ற தலைப்பை விட்டுக்கொடுப்பாரா வின்சென்ட் செல்வா என்ற கேள்வியும் தொடரத்தான் செய்கின்றது. காக்கி என்ற பெயரும் கடைசியில் விஜய்க்கு கைகொடுக்காமல்தான் போகும் போல.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top