11,729 Views
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, இந்திய வீரர்கள் பெங்களூரில் பயிற்சி முகாமில் பங்கேற்றிருந்தனர்.
அப்போது, இந்திய சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா, தங்கியிருந்த ஹோட்டலில், அவருக்கும் அவரது பெண் நண்பர் ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் தான் தாக்கப்பட்டதாக மிஸ்ராவின் பெண் நண்பர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். இதையடுத்து விசாரணை நடத்திய பொலிஸார், மிஸ்ராவின் மீது இரண்டு நாள்களுக்கு வழக்குப் பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஒரு வாரத்துக்குள் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி மிஸ்ராவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. இந்நிலையில் மிஸ்ரா மீதான முறைப்பாட்டை அவரது பெண் நண்பர் திரும்பப் பெற்றதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், தான் முறைப்பாட்டை மீள பெறப்போவதில்லை என்று பெண் நண்பர் கூறியுள்ளார்.
இந்நிலையில், பெண்ணைத் தாக்கிய வழக்கில் கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 3 மணி நேர விசாரணைக்குப் பிறகு மிஸ்ராவைக் கைது செய்தது பெங்களூர் காவல்துறை.
நன்றி - இந்திய ஊடகம்