2,242 Views
'Woolfell' என்ற ஹொலிவுட் படத்துக்கு இசையமைக்க இருக்கிறார் யுவன். அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியிடப்பட்டது.
எம்.ஆர்.ராதாவின் பேரன் பிரபாகரன் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகி வரும் அனிமேஷன் திரைப்படம் 'Woolfell'. தமிழ் திரையுலகில் இருந்து எடிட்டர் ப்ரவீன் மற்றும் ஒலி வடிவமைப்பாளர் குணால் ராஜன் ஆகியோர் பணியாற்றி இருக்கிறார்கள்.
இப்படம் குறித்து இயக்குநர் பிரபாகரன், "'Woolfell' திரைப்படம் ரோபோக்கள் கதாபாத்திரங்களாகத் தோன்றும் ஒரு அனிமேஷன் திரைப்படம். அரசியல் சார்ந்த கதைக்களமாக இப்படம் இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.
இப்படத்தின் டீஸருக்கு யுவன் இசையமைத்துக் கொடுத்துவிட்டார். விரைவில் இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்தவுடன், யுவன் பின்னணி இசையமைக்க இருக்கிறார்.
'Woolfell' படத்தை ஹரிகேன் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்திருக்கிறது. 2016ம் ஆண்டு வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
நன்றி: இந்திய ஊடகம்