நம்ம சினிமாவில் நடிக்க வருகின்ற ஹீரோயின்களுக்கு எப்படியாவது ரஜினி, அஜித், விஜய் ஜோடியாக நடித்து விடவேண்டுமென்பது கனவாக இருக்கும்.
அதிலும், இப்பொழுதுள்ள பல நடிகைகளின் எதிர்பார்ப்பு விருப்பம் எல்லாமே , தல அஜித்துடன் ஜோடி சேர்ந்துவிட வேண்டுமென்பதே!
அண்மையில் கொழுக் கொழுக் ஹன்சிகா, தனக்கும் அஜித்துடன் ஜோடியாக ஒரு சிறு காட்சியிலாவது நடித்து விட வேண்டுமென்பதே விருப்பம் என்று தெரிவித்திருந்தார் .
அண்மையில் கூட நாங்கள் எமது இணைய தளத்தில் குறிப்பிட்டிருந்தோம். ஹன்சிகா ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார் அஜித் ஜோடியாக நடிக்க ஆசை என்று!

இப்பொழுது அந்த ஆசைக்கு முற்றுப்புள்ளி இடப்பட்டிருக்கிறது.
அதாவது, அம்மணி அஜித் ஜோடியாகி விட்டார்.
அவரது முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்கவுள்ள, புதிய திரைப்படத்தில், அஜித் ஜோடியாகயுள்ளார் ஹன்சிகா.
ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சமந்தா என பல ஹீரோயின்களை அலசிய சிவா, கடைசியில் ஹன்சிகா தான் அந்தப்படத்தின் ஹீரோயின் வேடத்திற்கு சரியாக இருப்பார் என்று முடிவு செய்து ஹன்சிகாவிற்கு அந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறார்.
தன எதிர்பார்ப்பு பூர்த்தியானதை எண்ணி பூரித்துப் போயுள்ளார் ஹன்சிகா மேத்வானி.

ஆனாலும், இந்த வாய்ப்பை சிறுத்தை சிவாவிடம் தானாக சென்று கேட்டு பெற்றுக் கொண்டதாக விஷயம் அறிந்த வட்டாரங்கள் கூறுவதும், நாங்க சொல்லியே ஆகவேண்டியதுங்க.