12,217 Views
புலி படத்தில் தான் நடித்தற்காக தனக்கு வழங்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட சம்பளத்தில் ரூ.50 லட்சம் பாக்கியை தரவில்லை என்று கூறி தயாரிப்பாளர்கள் ஷிபு தமீன்ஸ், செல்வகுமார் ஆகியோர் மீது நடிகை ஸ்ரீதேவி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து புலி பட தயாரிப்பு நிறுவனமான எஸ்கேடி ஸ்டுடியோஸ் தெரிவித்திருப்பதாவது,
" புலி படத்தில் நடிக்க ஸ்ரீதேவிக்கு ரூ.3 கோடி சம்பளம் பேசினோம்(ரூ.2.7 கோடி மற்றும் ரூ.30 லட்சம் சேவை வரி). பட வேலைகள் முடியும் தருவாயில் அதை தெலுங்கு மற்றும் இந்தியில் மொழிமாற்றம் செய்தால் மேலும் சில கோடிகள் வேண்டும் என ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் கேட்டார்.
டப்பிங் உரிமை எல்லாம் தயாரிப்பாளர்களிடம் மட்டும் தான் உள்ளது. விஜய், சுதீப், ஸ்ருதி என யாரும் எங்களிடம் இப்படி கேட்கவில்லை. ஆனால் போனி கபூர் அதை எல்லாம் கேட்காமல் கூடுதல் பணம் அளித்தால் தான் ஸ்ரீதேவியை நடிக்க அனுப்புவேன் என்றார்.
புலி படத்தால் பல பக்கத்தில் இருந்தும் எங்களுக்கு நஷ்டம். மேலும் எங்கள் வீடுகளில் நடந்த வருமான வரிசோதனை பிரச்சனை வேறு. அதனால் இதை எல்லாம் மனதில் வைத்து கூடுதல் பணத்தை கேட்காமல் இருக்குமாறு ஸ்ரீதேவி தரப்பை கேட்டுக் கொள்கிறோம். அதே சமயம் அவருக்கு நாங்கள் அளிப்பதாக கூறிய சம்பளத்தை கொடுத்துவிட்டோம் என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்" என்றார்.
நன்றி: இந்திய ஊடகம்