Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
22
புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையில் தளர்வு

#sooriyanfmnews #news - புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையில் தளர்வுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,305 Views
முன்னாள் அரசாங்கத்தினால் புலம்பெயர்ந்த அமைப்புகள் மற்றும் தனி நபர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது
இது தொடர்பான வர்த்தமான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருப்பதாக தெரிவித்து, 16 ஒழுங்கமைப்புகள் மற்றும் 424 தனி நபர்களுக்கு எதிராக கடந்த வருடம் மார்ச் மாதம் 21ம் திகதி தடை ஏற்படுத்தப்பட்டது. 

எனினும், புதிய வர்த்தமானி அறிவிப்பின் படி, எட்டு அமைப்புகளும், 155 தனி நபர்களுமே தடை பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, உலக தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, தேசிய கனேடிய தமிழ் சபை, தமிழ் இளைஞர் ஒழுங்கமைப்பு, உலக தமிழ் ஒத்துழைப்பு குழு, கனேடிய தமிழ் காங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய சபை ஆகியவற்றுக்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளன.

எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் மறுவாழ்வு ஒழுங்கமைப்பு, தமிழர் ஒத்துழைப்பு சபை, உலக தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழ் ஈழ மக்கள் இயக்கம், உலக தமிழர் விடுதலை நிதியம் மற்றும் தலைமையக குழு ஆகிய அமைப்புகளுக்கு எதிரான தடைகள் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளன.

இந்த தடைகள் குறித்து மீளாய்வு செய்யப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top