சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார்.'ஈசன்' திரைப்படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார்.
இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான "கருடன்", "நந்தன்" ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து இவர் 'Tourist Family' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில் ஜோக்கர், குக்கூ, ஜப்பான் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிகர் சசிகுமார் நடித்து வருகிறார். இதில் சசிகுமாருக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை சைத்ரா நடித்துள்ளார்.
இத் திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், ‘மை லார்ட்' என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தின் First Look போஸ்டரை பிரபல பொலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் வெளியிட்டுள்ளார்.