மீன்கள் அனைத்திலும் ஒமேகா 3 நிறைந்துள்ளது. அவற்றிலும் ஒமேகா 3 அதிகமுள்ள ஒரே மீன் விரால் மீன்தான்.
கடல் உணவுகளில் எப்போதுமே சத்துகள் அதிகம். குறிப்பாக விரால் மீன்களை உண்பதால் உடல் எடை அதிகரிக்காது. அத்துடன் மூளை சிறந்த முறையில் தொழிற்படவும் உதவி புரிகின்றது.
கண்பார்வைக் குறைபாடு மற்றும் Thyroid பிரச்சினைகளுக்கு விரால் மீன்கள் நல்ல மருந்தாகப் பயன்படுகின்றன.
இந்த வகையான மீன்களைத் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைவடைகின்றது. நரம்புத்தளர்ச்சி நோயும் நீங்குகிறது.
விரால் மீன்களை உண்பதால் மன அழுத்தத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். முக்கியமாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் இந்த மீனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு ஒமேகா 3 ஊட்டச்சத்து கிடைக்கும். கர்ப்பத்திலுள்ள குழந்தைகளின் எலும்புகளின் வளர்ச்சிசிக்கும் உதவி புரிகின்றது.