இயக்குனர் ஆதிராஜன் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சிலந்தி ' . இத் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இத் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'சிலாந்தி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி என 6 மொழிகளில் Thriler திரைப்படமாக உருவாகவுள்ளது.
இத் திரைப்படத்தில் மாளவிகா மற்றும் ரியாஸ்கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு கம்போடியா, வியட்நாம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.