குறிப்பிட்ட ஓரு காலப்பகுதியில் கிடைக்கும் இராசவள்ளிக் கிழங்கின் நன்மைகளைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இதில் விற்றமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகின்றன . அத்துடன் இந்தக் கிழங்கில் நார்ச்சத்தும் விற்றமின் C யும் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்தக் கிழங்கு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாகும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மிகவும் நிதானமாகவே அதிகரிப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு இராசவள்ளிக் கிழங்கு சிறந்தது.
இந்தக் கிழங்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதோடு உடலில் இருக்கும் செல்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்க வல்லது.
இராசவள்ளிக் கிழங்கு இளமையைப் பாதுகாக்கும் மிகச் சிறந்த உணவாகத் திகழ்கிறது.
இதில் இருக்கும் தாதுக்கள் இரத்தக் குழாய்கள் நன்றாக சுருங்கி விரிய உதவி செய்கிறது. இதனால் இரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
இராசவள்ளிக் கிழங்கை சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காது. ஆகையால், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
கண்பார்வைப் பிரச்சினை உள்ளவர்கள் இராசவள்ளிக் கிழங்கை சாப்பிட்டால் கண்பார்வையினை கூர்மையடையச் செய்யமுடியும்.
எனவே இவ்வாறான நன்மைகளைக் கொண்ட இராசவள்ளிக் கிழங்கினை உட்கொண்டு அதனால் கிடைக்கக் கூடிய நன்மைகளைப் பெற்று ஆரோக்கியத்தினை அதிகரித்துக் கொள்ளுங்கள்.