ஒரு சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை 'Mufasa' கடந்து வந்த பாதையை வைத்து காட்டு விலங்களுக்கு இடையே உள்ள பொறாமை, வஞ்சம், சூழ்ச்சி, போராட்டம், பந்தம் , காதல், தலைமை என அனைத்து குணாதிசயங்களையும் கொண்டு 'Mufasa The Lion King' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
அரச குடும்பத்தைச் சாராது, அனாதையாக வளர்ந்து தனக்கான ஆட்சியை உருவாக்கும் Mufasa வின் கதை மெய்சிலிர்க்க வைக்கிறது. இத்திரைப்படத்தை ஆஸ்கர் விருதை வென்ற 'Jeff Thomson' எழுத 'Barry Jenkins' இயக்கியுள்ளார்.
இத்திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பம் மாதம் 20 ஆம் திகதி வெளியாகி இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்திய அளவில் சாதனை படைத்த இத்திரைப்படம் 'JioHotstar' ஓ.டி.டி தளத்தில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நாளை வெளியாகவுள்ளது.