மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 500 ஓட்டங்களைப் பூர்த்திசெய்து இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனை சார்லட் எட்வேர்ட்ஸுக்கு 28 வருடங்கள் சொந்தமாக இருந்த சாதனையை இந்திய வீராங்கனை ப்ரத்திகா முறியடித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நான்கு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற போட்டி மூலம் சர்வதேச அரங்கில் அறிமுகமான ப்ரத்திகா ராவல், ஒரு சதம், 5 அரைச் சதங்கள் உட்பட 516 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இதன் மூலம் இருபாலாரிலும் வேகமாக 500 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தவர்களில் தென் ஆபிரிக்காவின் ஜென்மான் மாலனுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஜென்மான் மாலன் 7 இன்னிங்ஸ்களில் 500 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தார்.