நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா ஆகியோர் தொடர்பான சர்ச்சைகள் பெரியளவில் பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது பாடகி கெனிஷாவை மறைமுகமாக சுட்டிக்காட்டி ரவி மோகனின் மனைவி ஆர்த்தி மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் "உங்கள் வாழ்வின் ஒளி என அறியப்படும் அவர் எங்கள் வாழ்வில் இருளைக் கொண்டுவந்தார் என்பதே உண்மை.
சட்டப்படி விவாகரத்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் முன்பே 3ஆவது நபர் எங்கள் வாழ்வில் வந்துவிட்டார்.
கண்ணியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை விட நாடகம் போடுபவர்களுக்கே அதிக இடமுள்ளது இந்தக் காலத்தில்.
என்னைச் சுற்றி நடக்கும் சமீபத்திய சூழ்ச்சிகளால் வேறு வழியின்றி என்னை மீண்டும் பேசும்படி செய்துவிட்டது.
என் பிடியிலிருந்து தப்ப நினைத்தால் அவர் தொலைத்ததாகக் கூறும் பெற்றோர்கள் வீட்டிற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும்.
துன்புறுத்தப்பட்டதாக, தனிமைப்படுத்தப்பட்டதாக கூறும் ரவி ஏன் ஒவ்வொரு வருடமும் திருமண நாளைக் கொண்டாடினார்?" என்று ஆர்த்தி ரவி குறித்த அறிக்கையின் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.