SooriyanFM Gossip - பூஜையுடன் ஆரம்பமானது சூர்யாவின் 46 ஆவது திரைப்படம் ..!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
157 Views
ஆர்.ஜே.பாலாஜி இயக்கிவரும் திரைப்படத்தைத் தொடர்ந்து," வாத்தி" , "லக்கி பாஸ்கர்" ஆகிய திரைப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இது சூர்யாவின் 46ஆவது திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜு நடிக்கவுள்ளார்.
அத்துடன் ராதிகா சரத்குமார் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோரும் இந்தத் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
இந்தத் திரைப்படத்திற்கு G.V.பிரகாஷ்குமார் இசையமைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.