"ஜெயிலர்" திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் மீண்டும் நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வருகின்றது. "ஜெயிலர்" திரைப்படம் 2023இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிவராஜ்குமார், மோகன்லால், ஜக்கி ஷெரஃப், சுனில் போன்றோர் கெளரவ வேடங்களில் நடித்திருந்தனர்.
"ஜெயிலர் 2" திரைப்படத்திற்கும் அனிருத் இசையமைக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே கேரளாவில் ஆரம்பமான நிலையில் படப்பிடிப்பில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் தெலுங்குத் திரையுலக நட்சத்திரம் நந்தமுரி பாலகிருஷ்ணாவும் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட ரஜினிகாந்த், "ஜெயிலர் 2" படப்பிடிப்பு நன்றாக சென்றுகொண்டு இருக்கிறது. படப்பிடிப்பு நிறைவுபெற டிசம்பர் மாதம் ஆகலாம் எனக் கூறியுள்ளார்.