தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜனநாயகன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படம் 2026ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி உலகளவில் வெளியாக உள்ளது. 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குப் பின் முழு நேர அரசியலில் தளபதி விஜய் ஈடுபடவுள்ளார்.
இத்திரைப்படம் நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படம் என்பதால், இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இத்திரைப்படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரேன், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நேற்று நடிகர் விஜய் தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார்.
இந்த நிலையில், 'ஜனநாயகன்' படப்பிடிப்புத் தளத்தில் தளபதி விஜய் பகிர்ந்த முக்கியமான தகவல் ஒன்று குறித்து நடிகை மமிதா பைஜு பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், 'இதுதான் உங்களுடைய கடைசி திரைப்படமா? என விஜய் சாரிடம் கேட்டேன். அதற்கு அவர் தெரியவில்லை. தேர்தல் முடிந்த பிறகு பார்க்கலாம் என்று கூறியிருந்தார்'.
அவரின் இந்தப் பதில் விஜய் இரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்குப் பிறகும் அவர் தொடர்ந்து நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
மேலும், கடைசி நாள் 'ஜனநாயகன்' படப்பிடிப்பில் எல்லாருமே Emotional ஆக இருந்தோம். விஜய் Sir உம் அப்படித்தான் இருந்தார் என நடிகை மமிதா பைஜு தெரிவித்துள்ளார்.