மலையாளத்தில் தொலைக்காட்சித்தொடர்களை இயக்கி வந்த இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு, ஃபகத் ஃபாசில் இணைந்து நடித்துள்ள 'மாரீசன்' திரைப்படம் நாளை 25ம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் R.B. சௌத்ரியின் Super good films இன் 98 ஆவது திரைப்படமாக 'மாரீசன்' உருவாகியுள்ளது.
இந்த வாரம் தமிழ் சினிமாவில் 'மாரீசன்' மற்றும் விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' என இரு திரைப்படங்கள் மோதுகின்றன.
இந்நிலையில் 'மாரீசன்' திரைப்படத்தை பார்த்த கமல்ஹாசன் "மாரீசன் படத்தைப் பார்த்தேன் - இது நகைச்சுவைக்கும் மனித மனதிற்கும் இடையில் சிரமமின்றி நடனமாடும் ஒரு படம்,என்னை சிரிக்கவும், சிந்திக்கவும், பாராட்டவும் வைத்தது இந்த படைப்பு" என்று படக்குழுவை பாராட்டியுள்ளார்.