நாங்கள் தினமும் ஓடுவதன்மூலம் எங்கள் உடல் எங்களை மகிழ்ச்சியாக உணர உதவும் இரசாயனங்களை வெளியிடுகிறது.
ஆஸ்துமாவை நெருங்கவிடாமல் நுரையீரல் மற்றும் மூச்சுக் குழாய்களை வலுப்படுத்த உதவுகிறது.
ஓடும்போது தமனிகள் சுருங்கி விரிவடைவதால், இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கவும் உதவும். நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு. ஏனெனில் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும்.
ஓடும்போது ஒரு மணி நேரத்திற்கு 705 முதல் 865 கலோரிகள் எரிக்கப்படுவதனால், உடல் எடையும் குறையும்.
ஓடுவதன் மூலம் உடல் வலிமை கூடுவதோடு, தசைநார்கள் வலுப்படும்.
இரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்கச் செய்து நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க உதவும்.
தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் ஓடுவது நல்லது. அப்படி ஓட முடியாதவர்கள் 5 முதல் 10 நிமிடங்கள் ஓடுவது கூட உடல் உறுப்புகளுக்கு பலன் அளிக்கும்.