'தெகிடி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகியவர் நடிகர் அஷோக் செல்வன்.
அவர் நடிப்பில் வெளிவந்த 'போர் தொழில்' மற்றும் 'Blue Star' ஆகிய திரைப்படங்கள் அசோக் செல்வனுக்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுக்கொடுத்தன.
அண்மையில் வெளியான ' Thug Life ' திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் அஷோக் செல்வன் நடித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகர் அஷோக் செல்வன் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
இத்திரைப்படத்தில், அஷோக் செல்வனுக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடிக்கிறார்.
இத்திரைப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.