சூப்பர் ஸ்டார் ரஜனிக்கு பின்னர் விஜய் தான்-சொல்கிறார் A.R முருகதாஸ்.சர்சைகளும் ,சிக்கல்களும் தாண்டி திரைக்கு வந்து தீபாவளி விருந்து படைத்துக் கொண்டிருக்கும் இளைய தளபதி விஜய் நடித்த "கத்தி"திரைப்படம் முதல் நாளில் முத்திரை பதித்து சாதித்திருக்கின்றமை வரவேற்கத்தக்கதே!
கத்தி திரைப்படத்தின் ஆரம்ப நாளில் இருவர் காவுகொள்ளப்பட கவலையான சம்பவங்களுக்கு மத்தியில் தமிழ் நாட்டிலும் சரி,இலங்கையிலும் சரி கத்தி திரைப்படம் பற்றி காத்திரமான நல்ல கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றமை விஜய் தரப்பினரையும் படக்குழுவினரையும் உற்சாகப்படுத்தியிருக்கிறது.
இப்படியிருக்க விஜயை வைத்து A.Rமுருகதாஸ் இயக்கிய "துப்பாக்கி"திரைப்படத்துக்கு பின்னர் இந்த
"கத்தி"யும் கூரானதாகத்தான் தன் பயணத்தை ஆரம்பித்திருக்கிறது எனலாம்.
இது இப்படியிருக்க நகைச்சுவை கலந்த உணர்வும்+நடிப்பில் அச்சமின்றி உச்சம் தொடும் அதீத ஆற்றலும் இப்போதைய நடிகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பின்னர் இளையதளபதி விஜய்யிடம் நிறையவே நிறைந்திருக்கின்றது என்று இயக்குனர் A.R முருகதாஸ் தெரிவித்திருக்கிறார்.
கத்தி திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான இடியப்ப சிக்கல்களுக்கு மத்தியிலும் அடுத்த சூப்பர் ஸ்டாருக்கான கருத்து கணிப்பு தொடர்பிலும் சிக்குண்டு தவித்த விஜய்க்கு இந்த கருத்து எந்தளவு தூரம் காத்திரமானதாக இருக்கப் போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியிருக்கின்றது.