சீனாவைச் சேர்ந்த AheadForm Technology நிறுவனம், மனிதர்களைப் போலவே தோற்றமளிக்கும் மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் மேம்பட்ட 'எல்ஃப் V1' (Elf V1) என்ற மனித உருவ ரோபோக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
Elf V1 என்ற மனித உருவ Robo, தொழில்நுட்ப உலகில் ஒரு பெரிய பாய்ச்சலாகக் கருதப்படுகிறது. இந்த Roboவின் தனிச்சிறப்பே அதன் வியக்கவைக்கும் மனிதத் தோற்றம்தான்.
Uncanny Valley பாதிப்பைத் தவிர்க்கும் வகையில், ரோபோவுக்கு மிக இயல்பான உயிரிணக்கத் தோல் (Bionic Skin) வழங்கப்பட்டுள்ளது. Elf V1-க்கு உணர்ச்சிப்பூர்வமான பதிலளிக்கும் திறனைக் கொடுக்க, அது சுய-கண்காணிப்பு AI அல்காரிதங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.
மனிதர்கள் வாய் வார்த்தையில் சொல்லாத போதும், அவர்களின் முகபாவங்கள் (Non-verbal cues), குரலின் தொனி போன்றவற்றிலிருந்து உணர்ச்சிகளைக் கண்டறியும் திறன் இந்த Roboவுக்கு உள்ளது. மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதே தங்கள் நோக்கம் என்று குறித்த நிறுவனம் கூறுகிறது.
இந்த Robo விரைவில் பல்வேறு துறைகளிலும், அன்றாட வாழ்க்கையிலும் ஒரு உதவியாளராகவும் துணையாளியாகவும் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.