சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்தில் மக்கள்செல்வன் விஜய் சேதுபதி கௌரவ கதாபாத்திரத்தில் நடித்திருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.
மேலும் இத்திரைப்படத்தின் முக்கியமான காட்சிகள் கோவாவில் படமாக்கப்பட்டுள்ளதுடன் அந்த காட்சிகளில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், விஜய் சேதுபதி ,நெல்சன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படையாகச் சொல்லியிருந்த நிலையில் அந்த விருப்பம் இப்போது நிறைவேறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.