சுதா கொங்கரா இயக்கத்தில் சிவ கார்த்திக்கேயன் நடிக்கும் 25 ஆவது திரைப்படமான 'பராசக்தி' திரைப்படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத் திரைப்படத்திற்கு GV.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இத் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாத நிலையில் இத் திரைப்படம் குறித்த திகதிக்கு வெளியாகுமா என இரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் Release திகதியை உறுதிப்படுத்தும் வகையில் திரைப்படக்குழு மீண்டும் Poster ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. இத் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.