குவைட் நாட்டிற்கு சேவைக்கு சென்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து அநாதரவாக்கப்பட்ட 50 பணியாளர்கள் இன்று பகல் இலங்கை அழைத்துவரப்பட்டனர்.
இவர்களில் 44 பெண்கள் அடங்குவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அவர்கள் இன்று நண்பகல் 12.20 மணியளவில் குவைட் நாட்டிலுருந்து UL 230 என்று விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
குவைட் நாட்டிற்கு சேவைக்கு சென்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த இவர்களை அந் நாட்டிற்கான இலங்கை தூதுவர் காரியாலத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளினால் குறித்த இலங்கையர்கள் 50 பேரை வீடுகளுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.