நடிகர் அஜித்தின் 64வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் ஆரம்பமாகும் என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் முன்னதாக அறிவித்திருந்தார்
இந்நிலையில் AK 64 திரைப்படத்தின் தயாரிப்பாளர் யார் என்ற தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது.
பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான அனில் சுன்கரா தான் இந்த படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளார்.
இதற்கு முன் அவர் தெலுங்கில் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.