Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
16
த்ரிஷ்யம் 3 திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gossip Sooriyan Fm - த்ரிஷ்யம் 3 திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

44 Views
​மலையாளத் திரையுலகின் மைல்கல் திரைப்படமாகக் கருதப்படும் 'த்ரிஷ்யம்' (Drishyam) திரைப்படத்தின் மூன்றாம் பாகம் குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரிக்கின்றன.
இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் 'த்ரிஷ்யம் 3' திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மீண்டும் 'ஜார்ஜ்குட்டி' எனும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். நடிகை மீனா உள்ளிட்ட ஏனைய நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முந்தைய இரண்டு பாகங்களையும் இயக்கிய ஜீத்து ஜோசப் (Jeethu Joseph) அவர்களே இந்தப் பாகத்தையும் நெறிப்படுத்துகின்றார்.

த்ரிஷ்யம் திரைப்படம் தமிழ் (பாபநாசம்), தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழிகளில் மீளுருவாக்கம் (Remake) செய்யப்பட்டு பெரும் வெற்றி பெற்றது. தற்போது இத்திரைப்படம் ஆங்கிலம் மற்றும் கொரிய மொழிகளிலும் மீளுருவாக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளியாகியுள்ள தகவல்களின்படி, இத்திரைப்படத்தின் மலையாள மற்றும் ஹிந்திப் பதிப்புகள் ஒரே காலப்பகுதியில் படமாக்கப்பட்டு வெளியிடப்படலாம் எனத் தெரிகின்றது.

​த்ரிஷ்யம் இரண்டாம் பாகத்தின் இறுதியில் ஜார்ஜ்குட்டி தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகப் போட்ட திட்டம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்தப் பாகத்தில் அதனைத் தொடர்ந்து என்ன நடக்கப் போகின்றது என்பதைப் பார்க்க இரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top