கிரிக்கெட் இரசிகர்களின் மற்றுமொரு கொண்டாட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.
பல்வேறு விமர்சனங்கள், தடைகைகளுக்கு மத்தியில் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் இன்று ஆரம்பமாகிறது. அதன்படி, இந்த தொடருக்கான முழு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
2026 ஐ.பி.எல் தொடரின் முதலாவது போட்டி ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையில் இன்று இரவு 7.30 க்கு பெங்களுருவில் நடைபெறவுள்ளது.
A மற்றும் B என இரு குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி குழு A இல் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
அதேவேளை, குழு B இல் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.