இந்தியப் பெருங்காரை (Great Indian Bustard) பறவை இனம், மொத்தமே 150-க்கும் குறைவாகத் தான் உலகில் மிஞ்சியிருக்கிறது.
இந்த இனம் புவியிலிருந்து மறைந்தே போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்த விண்வெளி மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு, ராஜஸ்தான் பாலைவனத்திலிருந்து ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.
ஜெய்சால்மரில் உள்ள பாதுகாப்பு மையத்தில், அதிநவீன அறிவியல் தொழில்நுட்பமான செயற்கை கருவூட்டல் (Artificial Insemination) மூலம் 2 குஞ்சுகள் வெற்றிகரமாக பிறந்துள்ளன.
இது, அழியும் தருவாயில் உள்ள ஒரு உயிரினத்தை நவீன அறிவியல் தொழில்நுட்பத்தால் எப்படிக் காப்பாற்ற முடியும் என்பதற்கான ஒரு பெரிய சான்றாகும்.
இந்தச் சிறிய குஞ்சுகளின் வருகை, இந்தியப் பெருங்காரை இனம் மீண்டும் இந்தியாவின் புல்வெளிகளில் சுதந்திரமாகப் பறப்பதற்கான புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.