1,433 Views
நாட்டின் இணையத்தின் வேகம் எதிர்காலத்தில் பாதிக்கப்படலாம் என வெளியாகி வரும் செய்திகளில் உண்மையில்லை என தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளாரால் , 'National Broadband Initiative' என்றறியப்படும் , இலங்கையில் இணையத் தொடர்புகள் வேகமாக இருப்பதனை உறுதிசெய்யும் அமைப்பின் உறுப்பினர்கள் பலரின் ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் இருக்க முடிவு செய்யப்பட்டது.
இதன்காரணமாக இலங்கையின் இணைய வேகத்தில் பாதிப்புகள் ஏற்படுமென செய்திகள் வெளியாகிய வண்ணமுள்ளன.
இந்நிலையில் இது தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு நாம் அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோவை தொடர்பு கொண்டிருந்தோம்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 18 பேர் கொண்ட , 'National Broadband Initiative' குழுவில் சிலரது ஒப்பந்தத்தை நீட்டிக்கவில்லை எனவும் ,அதில் சிலரை நீக்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நீக்கப்பட்ட குழுக்களினால் இது தொடர்பாக ஊடகங்களுக்கு தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தமது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் , இணைய வசதிகள் மற்றும் இணைய வேகம் தொடர்பான காரணிகள் தமது அமைச்சின் கீழ் உள்ளதாக அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.
தற்போது இதன் பொறுப்பை தமது அமைச்சு ஐ.சீ.டி பிரிவின் மூலம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.
காணொளியைப் பார்க்கவும்.