3,562 Views
பங்களாதேஷில் இந்த மாத இறுதியில் தொடங்கும் கனிஷ்ட உலகக் கோப்பை (19 வயதுக்குட்பட்டோர்) கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் தலைவராகவுள்ள 17 வயதான விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பீகார் மாநிலம் கங்கார்பாக் என்ற இடத்தில் இவர் தனது தந்தை பிரனாப் பாண்டேவுடன் நேற்று முன்தினம் காரில் சென்ற போது, ஆட்டோவின் பின்னால் கார் மோதியுள்ளது.
காரை கிஷன் வேகமாக ஓட்டியதாகவும், அதனால் தான் விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஆட்டோவில் இருந்த சிலர் காயமடைந்தனர்.
அப்போது அங்கு வந்தவர்களிடம் இஷான் கிஷன் வாக்குவாதம் செய்து, கைகலப்பாகும் சூழல் உருவாகியுள்ளது.
தகவல் அறிந்து விரைந்த பொலிஸார், கவனக்குறைவாக கார் ஓட்டியதன் அடிப்படையில் கிஷனை கைது செய்ததாக தகவல்கள் வெளியானது. இதனால் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் கிஷன் கைது செய்யப்படவில்லை, காரை ஓட்டியது பிரனாப் பாண்டே தான். இது சிறிய விபத்து. இரு தரப்பு இடையே சமரசம் பேசி பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.