பின்லேடன் எப்படி கொல்லப்பட்டார்??கசியும் பரபரப்பு தகவல்கள்.ஒசாமா பின்லேடன் பெயரை கேட்டாலே சும்மா அதிருதில்ல? இப்படி ஒருகாலம் இருந்தது அமெரிக்காவுக்கு.
11/09/2001 அன்று அமெரிக்காவின் பெண்டகன் தகர்க்கப்பட்டது. அந்த சம்பவத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு மூலகாரணம் ஒசாமா பின்லேடன். இவரை பிடிப்பதற்கான பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. 2011ம் ஆண்டு பாகிஸ்தானின் அபோதாபாத்தில் உள்ள ரகசிய வீட்டில் பதுங்கிருந்தபோது, அமெரிக்காவின் சீல் படைபிரிவு வீரர்களால் சுட்டு கொல்லபட்டார். இது எல்லோருக்கும் தெரிந்த விடயம் .ஆனால், பின்லேடனை சுட்டது யார் என்பதையும், யாரெல்லாம் அந்த படையில் இருந்தனர் என்பதை அமெரிக்கா இதுவரை சொல்லவில்லை.
இந்த நிலையில், அமெரிக்க சீல் படைப் பிரிவில் இடம் பெற்றிருந்த பின்லேடனை, நேருக்கு நேர் சுட்டுக் கொன்ற வீரர் தனது அடையாளத்தை முதல் முறையாக வெளிப்படுத்தவுள்ளார்.
பாக்ஸ் தொலைகாட்சியில் தன்னை வெளிப்படுத்த உள்ளார்.
"The Man Who Killed Osama Bin Laden" என்ற ஆவணப்படம், நவம்பர் மாதம் 11,12ம் திகதிகளில் இரண்டு பாகமாக ஒளிபரப்பாக உள்ளது.
அந்த நிகழ்ச்சியில் இதுவரை வெளிவராத பல முக்கியத் தகவல்கள் இடம் இடம்பெறவுள்ளதாம். மேலும் பின்லேடனுடன் நடந்த மோதலின் அந்த பரபரப்பு தருணங்கள் குறித்தும், அந்த வீரர் விரிவாக பேசப் போகிறாராம்.
பின்லேடனை நேரில் பார்த்தது, அவருடன் நடந்த மோதல், சாகும் முன்பு பின்லேடன் பேசியது உள்ளிட்ட அனைத்தையும் சொல்லப் போகிறாராம் அந்த வீரர்.
இணையத்தில் இருந்து திரட்டியதை தொகுத்து தந்தவர் -வர்ஷி-