9,140 Views
இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணமுள்ளன.
இது தொடர்பிலான செய்திகள் தினசரி வெளியாகிய வண்ணமுள்ளன.
அவ்வாறானதொரு சம்பவமே இது…
பதவிய , ஸ்ரீபுர பிரதேசத்தில் 11 வயது சிறுமியொருவர் தனது பாட்டனார், சகோதரன் மற்றும் அயலவர் ஒருவரால் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுமியின், தாயின் தந்தையே ஆரம்பத்தில் சிறுமியிடம் குற்றத்தை புரிந்துள்ளார்.மகளை பார்த்துக்கொள்ளுமாறு அவரது தாயார், தனது தந்தையிடம் விட்டுச் சென்ற வேளையிலேயே முதற்தடவையாக குற்றம் இடம்பெற்றுள்ளது.
இதனை தெரிந்துகொண்ட சிறுமியின் 12 வயது சகோதரன் , வீட்டில் அருகில் வசிக்கும் 22 வயது இளைஞன் ஆகியோர் தொடர்ந்து குற்றத்தை புரிந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் அனைவரும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.