ஹம்பாந்தோடை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக அபிவிருத்திச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் இடம்பெற்றுவரும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்பொருட்டு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன் இலங்கையில் முதலீடு செய்ய அனைத்து நாடுகளுக்கும், தாம் அழைப்பு விடுப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.