இந்தியாவை அதிரவைக்கும் முத்த போராட்டம் என்னடா தலைப்பு இது என்று யோசிக்கின்றிர்களா?
வேலை நிறுத்த போராட்டம்,
அமைதி போராட்டம்,
உணவுதவிர்ப்பு போராட்டம்,
மனிதசங்கிலி போராட்டம்,
சட்டப்படி வேலைசெயும் போராட்டம் என நாம் பல போராட்டங்களை கேள்விபட்டிருகின்றோம் இப்போது இந்தயாவில் நடக்கிறது 'முத்தப் போராட்டம்'
கேரளாவில் உள்ள ஒரு தேநீர் விருந்தகத்தில் ஆண்களும் பெண்களும் அநாகரீகமாக நடந்துகொள்கின்றனர் என்பதற்காக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணியினர் அந்த விருந்தகத்தை சேதபடுத்தினர் இதனை கண்டித்து சுதந்திர சிந்தனையாளர்கள் என்ற ஃபேஸ்புக் ஆர்வலர்கள் அமைப்பு கொச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முத்த போராட்டம் நடத்தியது. இந்நிலையில் மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள பிரபல ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்களும் இன்று முத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
கேரளாவை அடுத்து கொல்கத்தாவிலும் இந்த போராட்டம் தொடர உள்ளது.
சிலர் தானாக வந்து இளம் ஜோடிகளை தாக்குவதை கண்டித்து இந்த போராட்டம் நடத்துவதாகவும், இதில் பொது மக்களும் கலந்து கொள்ளலாம் என்றும் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதே போன்று கொல்கத்தா பிரெசிடென்சி பல்கலைக்கழக மாணவர்களும் முத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இன்னுமின்னும் எத்தனை பேர் தங்கள் தங்கள் வசதிகளுக்கும் விருப்புக்களுக்கும் ஏற்றார் போல் என்னவென்ன போராட்டங்களை ஆரம்பிப்பார்களோ ...!!
இணைய செய்தியை தொகுத்து வழங்கியது -வர்ஷி-