விஜய்யின் அடுத்தபடம் என்ன?கத்தி பட வெற்றியின் பின் விஜயின் அடுத்தபடம் என்ன? "மாரீசன்"
இயக்குகிறார் சிம்புதேவன், நாயகிகள் ஹன்சிகா,ஸ்ருதிஹாசன்.
இப்போது படப்பிடிப்பும் இடம்பெற்று வருகிறது. இது விஜயின் 58வது படம். இந்தத்தகவல்கள் நமக்கு தெரிந்ததே!
ஆனாலும், புதிய செய்தி என்னவென்றால், புது மாப்பிள்ளை அட்லியின் இயக்கத்தில் விஜயின் 59வது படம் 2016 பொங்கலுக்கு வெளிவரபோகிறது .
ராஜா ராணி வெற்றி கொடுத்த அட்லி, தனது இரண்டாவது படத்தை மாஸ் படமாக்கவேண்டும் என்ற துடிப்போடு விஜய்க்காக எழுதியுள்ள கதையாம் இது. விஜய் 59 படத்தின் வேலைகள் இப்போதே ஆரம்பமாகிவிட்டன. கலைப்புலி எஸ்.தாணு இயக்கும் படம் மாஸ் ஆக இருக்கும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வில்லு படத்தில் ஜோடிசேர்ந்த நயன் தான் இந்த படத்தின் நாயகி.59வது படத்தில் விஜய்க்கு போலீஸ் கதாபாத்திரம். ஏற்கனவே போக்கிரி, ஜில்லா படங்களில் போலீஸ் ஆக நடித்திருக்கிறார் விஜய்.
இந்தப் படத்தை கலைப்புலி தாணு தனது வி கிரியேஷன்ஸ் மூலம் தயாரிக்கிறார். தாணு ஏற்கெனவே விஜய்யை வைத்து சச்சின், துப்பாக்கி படங்களைத் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இசை ஜி.வி.பிரகாஷ் குமார். இது ஜிவிக்கு 50வது படம்.
2016ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.
இணையத்தில் கசிந்ததை தொகுத்து தந்தவர் -வர்ஷி-