நான் அவனில்லை, அஞ்சாதே, பாண்டி, போன்ற பல வெற்றிப் படங்களைத் தயாரித்த நேமிசந்த் ஜபக், வி.ஹித்தேஷ் ஜபக் பட நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் படம் ‘வன்மம்’.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ‘கழுகு’ கிருஷ்ணா என இரண்டு நாயகர்கள் நடிக்கின்றனர். நாயகியாக சுனைனா நடிக்கிறார். ஆனால் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி கிடையாது. சுனைனா, கிருஷ்ணாவுக்குதான் ஜோடியாம். இவர்களுடன், ‘கோலி சோடா’ மதுசூதன்,ஸ்ரீரஞ்சனி மற்றும் பலர் நடிக்க இருக்கிறார்கள்.
அறிமுக இயக்குனர் ஜெய் கிருஷ்ணா இயக்குகிறார். இவர், பி.கலைமணி, கமல்ஹாசன்,ஆர்.கே.செல்வமணி, சிம்பு போன்றவர்களிடம் பணி புரிந்தவர். படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஒரு தனிப்பட்ட மனிதர் மீது நாயகனுக்கு உருவாகும் பகைமைஇ கோபம்தான் படத்தின் கதை. இதனை நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து சொல்ப்படும் கதை தான் வன்மம் திரைப்படம்







