பரபரப்பாக பேசப்பட்ட நல்ல படமாக வந்த எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி திரைப்படங்களின் இயக்குனர் சரவணன், இப்பொழுது வலியவன் எனும் படத்தினை இயக்கி வருகிறார்.
ஜெய் அண்ட்ரியா இந்தப்படத்தின் கதை பேசும் ஜோடிகள்.
எங்கேயும் எப்போதும் ஜெய்க்கு பெற்றுக் கொடுத்த நல்ல பெயரை இந்தப்படமும் பெற்றுக் கொடுக்கும் என நம்பிக்கை பூக்கும் இயக்குனர் சரவணன், இந்த படம் முடியவும் இருவரதும் பொருத்தம் நன்றாக பேசப்படும் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளமை பலரையும் யோசிக்க வைத்துள்ளது.
இந்தப்படத்தில் புதுவிதமாக காதலை கொண்டுவருகிறேன் திரையில் என்கிறார் சரவணன்.
அத்தோடு ஜெய் மற்றும் அண்ட்ரியா பற்றி அதிகமாய் கிலாகிக்கிறார் சரவணன். இருவரதும் ஜோடிப் பொருத்தம் உண்மையான காதலர்களாகவே நினைக்கத் தோன்றும். அந்தளவுக்கு யதார்த்தமாகவும் உண்மையான ஜோடியாகவும் திரையை வளைய வருகிறது இந்த ஜோடிகள் என பெருமிதத்தோடு புகழும் சரவணன் இவர்களை இணைத்து கிசுகிசுப்பதற்கு எடுத்துக் கொடுக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
படம் வர முன்னம், இவர்கள் பற்றி பல பல பலே பலே செய்திகள் வரும் !!