எல்லோருக்கும் நம்ம தமிழ் சினிமாவைப் பொருத்தவரை, நடிகர்கள் நடிகைகள் வேறுபாடின்றி அத்தனைபேரும் இணைந்து நடிக்க ஆசைப்படும் ஒரே ஒருவர், தல அஜித்குமார் மட்டும்தான்.
அது அவரது பழக்க வழக்கங்கள், நடவடிக்கைகள் மற்றும் அவரது தனிப்பட்ட நடப்பு மீதுள்ள நம்பிக்கை மரியாதை நிமித்தம் என்பது அனைவரும் அறிந்ததே!
இப்பொழுது இன்னொரு பைங்கிளிக்கும் இந்த ஆசை தொற்றியுள்ளது.
அவர் இவர்தான்.
கெளதம் வாசுதேவ மேனனால், ஹிந்தியில் அறிமுகம் செய்யப்பட்ட ஆங்கிலேயப் பறவை எமி ஜாக்சன்.
தமிழ் தெரியாவிட்டாலும், தன் தேவதை அழகால் சில படங்களில் தனக்கென பாத்திரங்களை உருவாக்கச் செய்து அதில் தோன்றி, வெற்றி பெற்று வரும் இளமை கொஞ்சும் அழகி எமிக்கு, தலயோடு ஜோடி சேரும் ஆசை அரும்பியுள்ளது.
எமியோடு நல்ல நட்பை வைத்துள்ள கௌதமிடம் எமி ஒரு அன்பான வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதாவது, அஜித்தின் படத்தில் ஒரு வாய்ப்பு வாங்கித் தாங்க கௌதம். என் ஆசையை நிறைவேற்றுங்க என்பதாக அந்த வேண்டுகோள் அமைந்திருக்கிறது.
கௌதமும் அஜித்குமார் நெருங்கிப் பழகும் நண்பர்கள் லிஸ்டில் இருப்பதால், சில சமயம் தல சம்மதித்தால், அடுத்த படத்தில் எமியும் சேர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்புள்ளதாக கதை கசிந்திருக்கிறது.
#இப்பிடியே போனால், நம்ம தமிழ்நாட்டு அம்மணிகளின் நிலை?