வித்தியாசமான கதைக் களங்களோடு திரைக்கு வந்து வெற்றியை போர்த்திக் கொள்ளும் படங்களும் அடிக்கடி வரத்தான் செய்கின்றன.
இவ்வாறு அண்மையில் 2014இன் இறுதியில் வந்து வெற்றி பெற்ற படமான பிசாசு படத்தை எடுத்திருந்த இயக்குனர் மிஸ்கின், சில நாட்களுக்கு முன்னர் ஒரு கதையை சொல்வதற்காய் விஜய சேதுபதியிடம் சென்றுள்ளார்.
கதையைக் கேட்க முன்னமே, சேதுபதி '' சார் ! உங்க கதையோட நாயகர்கள் எல்லாம் கொஞ்சம்.. யதார்த்தத்துக்கு முரணாக, அதாவது இயற்கையான முறையில் இல்லாத பாத்திரங்களாக படங்கள்ல வந்திருப்பாங்க. அது எனக்கு செட் ஆகாது'' என்று திருப்பி அனுப்பியிருக்கிறார்.
இந்த நடவடிக்கையால் கோபமடைந்த மிஸ்கின், நான் யாரென்று காட்டுகிறேன். முதலில் எவ்வளவு பெரிய ஹீரோ என்றாலும் அடுத்தவரை மதிக்கத் தெரிந்திருக்கணும். இங்க எதுவுமில்ல. என்கிட்ட வராமல் எப்பிடி போறாங்கன்னு பார்க்கிறேன் என்று, காண்போரிடம் பொரிந்து தள்ளுகிறார்.
#சரி, ஒரு வாசனைப் படத்தோடு தான் போறது...?