பரபரப்பாகவும், வேகமாகவும் படமாகி வருகிறது புலி.
அத்தனை நட்சத்திரங்களும் ஆத்மார்த்தமாக உழைத்து வரும் படமென பேசப்பட்டுக் கொண்டிருக்கும் படம் இந்தப்படம். விஜயின் வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்ட கோணத்தில் அவரை கொண்டு செல்லும் படமாக அமையும் என்று இயக்குனர் கூட அடித்து சத்தியம் செய்துள்ளார்.
இந்தப்பட நிலவரம் இப்படியிருக்க, விஜய்யின் 59ஆவது படத்துக்கான ஏற்பாடுகளும் எக்கச்சக்கமாக நடைபெற்று வருகிறது.
அட்லீ இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாராவிடம் பேசினார்கள். அவர் மறுத்த செய்தியை ஏற்கனவே உங்களுக்கு சில நாட்களுக்கு முன்னம் தந்திருந்தோம்.
இப்பொழுது, சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜோடிகளை வலைவீசுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கோச்சடையான் தீபிகா படுகோன் மற்றும் லிங்காவின் நாயகி சோனாக்ஷி சின்கா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சம்பவங்கள் அம்பலம் வந்துள்ளன.
மொத்தத்தில், நாயகிகளின் பதில்கள் என்ன என்பது வெளியாகவில்லை.
பொறுத்திருந்து பார்ப்போமே !
-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
