கத்தி எப்போது வருது என்ற பரபரப்பை விட மோடி சந்தித்ததாலேயே இப்போ விஜய் பற்றித் தான் எங்கும் தீயாகப் பரபரப்பு.
எதிர்கால இந்தியப் பிரதமரே (!?) அழைத்து ஆசையாக சந்திக்கும் விஜயையே காக்க வைத்துக்கொண்டு இழுத்தடிக்கிறார் ஒரு சின்னப் பையன்.
இளைய தளபதி விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர்ஹிட். அப்படத்திற்கு இசையமைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். துப்பாக்கி படத்தின் வெற்றிக்கு ஹாரிஸ்ஜெயராஜின் இசை முக்கிய காரணமாக இருந்தது.

ஆனாலும், விஜய்யை வைத்து தற்போது இயக்கி வரும் கத்தி படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜை ஒப்பந்தம் செய்யவில்லை ஏ.ஆர்.முருகதாஸ். காரணம், துப்பாக்கி படத்தின்போது ஹாரிஸ் ஜெயராஜ் அநியாயத்துக்கு தாமதம் செய்தாராம். சொன்ன நேரத்துக்கு பாடல்களைக் கொடுக்காமல் பொறுமையை சோதித்திருக்கிறார். அதனாலேயே துப்பாக்கி பட பணிகள் கடுமையாய் பாதிக்கப்பட்டனவாம்.
ஹாரிஸ் ஜெயராஜினால் பட்ட அந்த அனுபவத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இன்னும் மறக்கவில்லை. அதனால்தான் கத்தி படத்துக்கு அனிருத்தை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தாராம்.
பெரிய இயக்குநர் தன்னை கமிட் பண்ணிய உற்சாகத்தில் ஆரம்பத்தில் சுறுசுறுப்பு காட்டிய அனிருத் அதன்பிறகு வழமைபோல் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டாராம். சொன்னபடி ட்யூனைக் கொடுக்காமல் இழுத்தடிக்க ஆரம்பித்துவிட்டாராம்.

ஏறக்குறயை முக்கால்வாசி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தநிலையில், அனிருத்திடமிருந்து இன்னும் ஒரு பாடல் வர வேண்டியதிருக்கிறதாம். உடனடியாய் அந்த பாடல் வேண்டும் என்று விரட்ட ஆரம்பித்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
வழக்கம்போல் பார்ட்டி, நண்பர்கள் (பெண் நண்பிகளும் தான்) சந்திப்பு இவற்றுக்கிடையில் இடையிடையே கொஞ்சமாக வேலை செய்கிறாராம் அனிருத்.
பார்த்துப் பார்த்து விஜய்யிடமே முறையிட்டுள்ளாராம் முருகதாஸ்.
விஜய் தூக்குவாரா கத்தி?