நாளை இந்திய ஆஸ்திரேலிய உலக கிண்ண யுத்தம் இடம்பெற உள்ள நிலையில், இந்திய பிரபல நடிகையும் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லியின் காதலியுமான அனுஷ்கா சர்மா நாளைய போட்டி நடைபெற உள்ள சிட்னி நகருக்கு பறந்துள்ளார்.
இந்திய முக்கிய பிரபலங்கள் முதல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பலர் இப்போது சிட்னியில் ஆசனமிட்டிருக்கும் நிலையில், அனுஷ்கா சர்மாவின் பயணம் தான் அதிகளவாக பேசப்படுகிறது.
இதுவரைக்குமான போட்டிகளில் கோஹ்லியின் அதிரடியை போதுமான அளவு காண கிடைக்கவில்லை என்று தவிக்கும் ரசிகர்கள் ,அனுஷ்காவை கண்டதும் கோஹ்லி சூடாகிடுவர். நாளைய போட்டியில் சிறப்பாக விளையாடுவர் என்றும் ஆசைப் படுகிறார்கள்.
நாளைய போட்டியில் கோஹ்லியை மட்டுமல்லாமல் இந்திய வீரர்கள் அனைவரையும் உற்சாக படுத்த போகிறார் அனுஷ்கா சர்மா.
-ஊர்காவி-