நடிகை மாதா மோகன்தாஸ் சிவப்பதிகாரம், தடையற தாக்க, குரு என் ஆளு படங்களில் நடித்தவர் . மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். ஏற்கனவே, இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்தார். கோலிவுட் அவரை கண்டுகொள்ளாவிட்டாலும் மலையாளம் கைவிடவில்லை. அவருக்கு பட வாய்ப்புகள் வழங்கின.
இந்நிலையில் 2வதுமுறையாக அவருக்கு புற்றுநோய் அறிகுறிகள் தென்பட்டன. மனம் தளராமல் மீண்டும் தன்னை சிகிச்சைக்கு உட்படுத்திக்கொண்டார். சிகிச்சையின் பாதிப்பால் தலைமுடி கொட்டியது. குட்டையாக வெட்டிக்கொண்டார்.
இந்நிலையிலும் மம்தாவை இயக்குனர் ஷஃபி, தான் இயக்கும் புதிய மலையாள படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்திருக்கிறார். கணவரை பிரிந்துவிட்ட நிலையில், சினிமாவை மட்டுமே நம்பி இருப்பதாகவும் நோய் பாதிப்பை தாண்டி சினிமாவில் தொடர்வேன் என மம்தா நம்பிக்கையுடன் சொல்கிறார் மம்தா. இவருடைய நம்பிக்கைக்கும் நடிப்புக்கும் நிச்சயம் இடமுண்டு !
-கோடம்பாக்கக் குருவி-