பாகிஸ்தானிய சுழல்பந்து வீச்சாளரான ராஸா ஹசன் கொக்கேய்ன் போதைப்பொருளை உட்கொண்டது பரிசோதனைகளில் கண்டறியப்பட்டதனால் இரண்டு வருடங்கள் போட்டித் தடைக்கு உள்ளாகியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அண்மைக்காலத்தில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ள ஹசன் பாகிஸ்தானின் பிராந்திய அணியான பஞ்சாப் பாட்ஷாஸ் அணிக்காக விளையாடிய போதே இவர் கொக்கேய்னை உட்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் பல பாகிஸ்தானிய வீரர்கள் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து, போதைப்பொருள் பாவனைகளுக்காக தடை செய்யப்பட்டு, மற்றும் தண்டிக்கப்பட்டிருந்தனர்.
முக்கிய வீரர்களான ஷொயிப் அக்தார், மொஹமட் ஆசிப் ஆகிய இருவருமே 2006இல் இவ்வாறு தடை செய்யப்பட்டும், பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அவர்களது தண்டனையை நீக்கியது குறிப்பிடத்தக்கது.
ஏஆர்வி