சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் தற்போது இயக்கி வரும் திரைப்படம் 'வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க. ஆர்யா, தமன்னா, சந்தானம், பானு, கருணாகரன் போன்ற பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த படத்தின் உரையாடல் பகுதிகளின் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடைந்த நிலையில், தற்போது பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்திற்காக ஒரு புதிய பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
இந்த பாடலை பிரபல பொலிவூட் பாடகர் அர்மான் மாலிக் பாடியுள்ளார். இவர் சல்மான்கான் நடித்த 'ஜெய் ஹோ' படத்தில் பாடியவர் என்பது முக்கியமானது. அத்தோடு, இவரது தந்தையும், சகோதரரும் ஹிந்தியின் பிரபல இசையமைப்பாளர்கள் ஆவர்.
வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க' படத்தில் டி.இமான் இசையில் நா.முத்துக்குமார் பாடல் எழுத, அந்த பாடலை அர்மான் மாலிக் பாடியுள்ளார். இந்தப் பாடல் மிகச் சிறப்பாக வந்துள்ளதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.
-கோடம்பாக்கக் குருவி-