Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
24
குறளரசனுக்கு ட்யூனே வரவில்லையாம்! இலவசமாக ட்யூன் கொடுத்து உதவிய அனிருத்!

ithu-namma-aalu-issue - குறளரசனுக்கு ட்யூனே வரவில்லையாம்! இலவசமாக ட்யூன் கொடுத்து உதவிய அனிருத்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,331 Views
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு – நயன்தாரா நடித்து வரும் ‘இது நம்ம ஆளு’ படம் 70 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்தநிலையில் வருடக்கணக்கில் முடங்கிக் கிடக்கிறது.

இது தொடர்பாக இயக்குநர் பாண்டிராஜுக்கும் சிம்புக்கும் மிகப்பெரிய வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது – அண்மையில். பிறகு ஒரு வழியாக சமாதானப்படலம் நடந்தது. அதன்படி விரைவில் படப்பிடிப்பை முடித்து ‘இது நம்ம ஆளு’ படத்தை முடிப்பது என்று முடிவு செய்தனர்.


உற்சாகமான பாண்டிராஜ், நயன்தாராவிடம் கெஞ்சிக் கூத்தாடி ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ‘இது நம்ம ஆளு’ படத்துக்கு கால்ஷீட் வாங்கினார்.அந்த தேதிகளில் பாடல் காட்சியை படமாக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், குறிப்பிட்ட தேதியில் படப்பிடிப்பு நடக்கவில்லை.


நயன்தாராவின் கால்ஷீட் வீணாய்ப் போனது. ஏன் படப்பிடிப்பு நடக்கவில்லை? பாடல் ரெடியாகவில்லை…!ஏன்… ரெடியாகவில்லை?இது நம்ம ஆளு படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானா? அல்லது ஹாரிஸ் ஜெயராஜா? அல்லது இவர்களைப்போல் பிஸியான வேறு இசையமைப்பாளரா?


இது நம்ம ஆளு படத்தின் இசையமைப்பாளர் வேறு யாருமல்ல… டி.ராஜேந்தரின் இளைய மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன்தான். ராத்திரியில் பார்ட்டிகளில் சரக்கடிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் சும்மாதான் இருக்கிறார் குறளரசன்.


அப்புறம் ஏன்? பாடலைக் கொடுக்கவில்லை? வெளியே சொன்னால் வெட்கக்கேடு! குறளரசனுக்கு ட்யூனே வரவில்லையாம்.ஆர்மோனியம், கீபோர்டு, கிடார், தபேலா, தம்பூரா, மிருதங்கம் மற்றும் கொட்டாங்கச்சி என கையில் கிடைத்த வாத்தியங்களை எல்லாம் தட்டிப்பார்த்திருக்கிறார்.


ம்ஹூம்… ஒரு மெட்டும் வரவில்லையாம்.இதனால்தான் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நயன்தாராவை வைத்து எடுக்கவிருந்த பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கின்றது.


குறளரசனை நம்பிக் கொண்டிருந்தால் இது நம்ம ஆளு படம் இந்த ஜென்மத்தில் ரிலீஸ் ஆகாது என்பதை அறிந்து கொண்ட சிம்பு அனிருத்திடம் சரண் அடைந்திருக்கிறார். அதாவது குறளரசனுக்காக சில ட்யூன்களை இலவசமாகக் கொடுத்து உதவுமாறு கேட்டிருக்கிறார்.


‘அரைமயக்கத்தில்’ இருந்த அனிருத்தும் ஓகே சொல்லி இருக்கிறார். அனிருத்திடம் இரவல் வாங்கிய ட்யூனை வைத்து ஒருவேளை பாடல்கள் ரெடியானாலும், அதை சிம்புவும் குறளரசனும்தான் வீட்டில் போட்டு கேட்க வேண்டும்.

ஏன்?

பல தடவை கால்ஷீட் வாங்கி வேஸ்ட் பண்ணியதால், இனி கால்ஷீட் கேட்டு இந்தப் பக்கம் வந்தால் நடப்பதே வேறு என்று பாண்டிராஜை எச்சரித்திருக்கிறாராம் நயன்தாரா.


=== CASTRO RAHUL ===


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top